திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா: அமைச்சர் பங்கேற்பு

திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா: அமைச்சர் பங்கேற்பு
X

திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய  அமைச்சர் மூர்த்தி

வணிகவரி பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் 99- வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு வணிகவரி பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து, இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில், செல்லம்பட்டி ஒன்றிய கழகச்செயலாளர் சுதாகரன் முன்னிலை வகித்தார். இதில், திமுக நிர்வாகிகள் ஒன்றிய துணைச் செயலாளர் சிவனாண்டி, முன்னாள் ஒன்றியச்செயலாளர் உக்கிர பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் வீமா, செல்வம், மாயன், விக்கிரமங்கலம் பாண்டி அவைத்தலைவர் கனிசெல்வம், பொருளாளர் ஆசைத்தம்பி, இளைஞரணி ஆனந்த் ,சிவ. இளங்கோ, பிரபு, கோவிலாங்குளம் சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, செல்லம்பட்டிக்கு வருகை தந்த பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்திக்கு, செல்லம்பட்டி ஒன்றிய கழகம் சார்பாக ஒன்றிய செயலாளர் சுதாகரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!