உசிலம்பட்டி முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் ஜெயந்தி விழா காெண்டாட்டம்

உசிலம்பட்டி முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் ஜெயந்தி விழா காெண்டாட்டம்
X

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் தேவர் ஜெயந்தி விழா காெண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கு, கல்லூரிச் செயலர் வாலாந்தூர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பால கிருஷ்ணன், பொருளாளர் வன ராஜா நிர்வாக குழு உறுப்பினர்கள் போஸ், பாஸ்கர பாண்டியன், அம்மாசி, ஜெயவீரணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ரவி, விழாவை துவக்கி வைத்து பேசினார். பேராசிரியர் சதீஸ் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பார்வர்டு பிளாக் மாநில பொது செயலாளர் கதிரவன் மற்றும் தேசிய செயலாளர் தேவராஜ் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் ஜோதிராஜன், ஒருங்கிணைப்பாளர் பொன்ராம், செல்லம்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் ராஜா, புலவர் சின்னன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ் பேராசிரியை ஜான்சி தலைமையில் சிறப்பு பட்டி மன்றம் நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை, பேராசிரியைகள் நாகப்பிரியா, கீர்த்திகா, ராஜேஸ்வரி, சுபாஷ் ஆகியோர்கள் செய்திருந்தனர். ஆங்கில துறை பேராசிரியை இந்துஸ்ரி நன்றி கூறினார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு