ஜமாபந்தி முகாமில் பொது மக்களுக்கு பட்டா வழங்கிய மதுரை மாவட்ட ஆட்சியர்
ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு 81 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஸ் சேகர் வழங்கினார்.
ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு 81 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாய தணிக்கையின் (ஜமாபந்தி) போது, வீட்டுமனைப் பட்டா வேண்டி விண்ணப்பித்த நபர்களில் தகுதியான 81 பயனாளிகளுக்கு உடனடி நடவடிக்கையின் மூலம் பட்டா ஆணைகளை வழங்கினார்.
மதுரை மாவட்டத்திற்கு, உட்பட்ட 11 வருவாய் வட்டங்களில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களுக்கான 1432-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாய தணிக்கை (ஜமாபந்தி) 09.05.2023-அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், திருப்பரங்குன்றம் வருவாய் வட்டத்திற்கான தீர்வாய தணிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்றது.
குறிப்பாக, 09.05.2023 மற்றும் 10.05.2023 ஆகிய 2 தினங்கள் திருப்பரங்குன்றம் உள்வட்டத்திற்கு (பிர்கா) உட்பட்ட வருவாய் கிராமங்க ளுக்கும், 11.05.2023-அன்று வலையங்குளம் உள்வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும் என முறையே நடைபெற்றது.
பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு அடிப்படைத் தேவைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இவ்வாறு பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்து, தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வுகாண வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். குறிப்பாக, வீட்டுமனைப் பட்டா வேண்டி விண்ணப்பித்துள்ள மனுக்களை காலதாமதமின்றி தீர்வுகாண வேண்டுமென அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாய தணிக்கையின் (ஜமாபந்தி) போது, வீட்டுமனைப் பட்டா வேண்டி பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்ட தகுதியான 81 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா ஆணைகளை வழங்கினார்.இந்த நிகழ்வின்போது, திருப்பரங்குன்றம் வருவாய் வட்டாட்சியர் கே.அனீஷ் சத்தார் உடனிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu