உசிலம்பட்டியில் சுதந்திர தின விழா..!
ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
*நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
உசிலம்பட்டி:
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.,
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றினார்., முன்னதாக உசிலம்பட்டி கிராமிய கலைஞர்கள் மேல தாளம் முழங்க உசிலம்பட்டி கோட்டாச்சியரை அழைத்து வந்து தேசிய கொடியை ஏற்றும் போது உடனிருந்தனர்.,
தொடர்ந்து, உசிலம்பட்டி கிளை சிறையிலும், சிறை கண்காணிப்பாளர் மீர்ஷ் உசேன் உடன் இணைந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சுதந்திர போராட்டம்
ஆங்கிலேயர்களின் கீழ் பல ஆண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்த இந்திய மக்கள் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் பெற்றார்கள். ஆனால் சுதந்திரம் பெற்றது சாதாரணமாக அல்ல. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், லால் பகதூர் சாஸ்திரி, லாலா லஜபதி ராய், ராணி லக்ஷ்மி பாய், பாலகங்காதர் திலகர் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் போன்றவர்களின் தன்னலமற்ற முயற்சிகள் இதற்குத் தேவைப்பட்டன.
அவர்கள் நாட்டை நேசித்ததாலும், மக்கள் மீது அக்கறை கொண்டதாலும் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. சொந்த நிலத்தில் அடிமைகள் போல் உழைக்க மக்கள் ஒடுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை அவர்களால் சகிக்க முடியவில்லை. இந்த எண்ணம் சுதந்திரப் போராட்ட வீரர்களை தைரியத்தை உருவாக்கவும் அதற்கான வழியில் நின்று போராடி வெற்றிபெறவும் செய்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu