குடிநீர் வழங்காவிட்டால் போராட்டம் - கிராம மக்கள் அறிவிப்பு!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, விக்கிரமங்கலத்தில் குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்திய ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கண்டனம் உடனடியாக குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், செல்லம்பபட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த கலியுகநாதன் இருந்து வருகிறார். ஊராட்சி செயலாளராக பால்பாண்டி என்பவர் பணிபுரிகிறார். இந்நிலையில், விக்கிரமங்கலம் கருப்பு கோவில் பின்பாக உள்ள கிழக்கு பகுதி முழுவதும் திடீரென ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ஜல் ஜீவன் திட்டத்தில் போடப்பட்ட குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்தினர். இது குறித்து, பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்துவதால், தங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்றும், மாற்று வழியை செய்து விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு ஊராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் கால்வாய் கட்ட இருப்பதால் பைப்ப்புகள் அப்புறப்படுத்துவதாக கூறினார்கள். இதனால், கடந்த ஒரு வாரம் காலமாக இந்தப் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது .
இதனால், பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகிறார்கள்.
இது குறித்து, ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் பணிக்கு ஆட்கள் வரவில்லை அதனால் காலதாமதம் ஏற்படுகிறது என்று, அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். உடனடியாக, மதுரை மாவட்ட நிர்வாகம் செல்லம்பட்டி ஒன்றிய நிர்வாகம் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்க வேண்டும், அப்புறப்படுத்தப்பட்ட குடிநீர் குழாய்களை உடனடியாக செயல்படுத்த ஆணையிட வேண்டும் என்றும், மேலும், ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தங்களது கண்டனங்களையும் தெரிவித்தனர். மேலும், இந்தப் பகுதியில் விரைவில் குடிநீர் வழங்கவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu