உசிலம்பட்டியில் மனித கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு..!

உசிலம்பட்டியில் மனித கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு..!
X

மனித கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி 

உசிலம்பட்டியில் மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.

உசிலம்பட்டி.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ,ஆர்.சி .பள்ளிகள் சார்பாக மனித கடத்தல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

பள்ளித்தாளாளர் ரோஜாமனி முன்னிலை வகித்தார். வளன்சபை இல்ல தலைவிஅருட் சகோதரி சூசையம்மாள் வரவேற்று பேசினார். இவ்விழாவில், காவல் சார்பு ஆய்வாளர் லீலாவதி மற்றும் சிறப்பு ஆய்வாளர் சாந்தி ஆகியோர்கள் தலைமை ஏற்று மனித கடத்தல் குறித்தும், பெண்கள், பெண் குழந்தைகள், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.


இதில்,பள்ளித் தலைமை ஆசிரியர் அருள்லூயிஸ்மெர்சி,உதவித்தலைமை ஆசிரியர் விமலா மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சகாயம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை, காவல் சார்பு ஆய்வாளர் லீலாவதி தொடங்கி வைத்தார்.

பள்ளியில் இருந்து மனித சங்கிலி பேரணியானது, தொடங்கி பேருந்து நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் பொது மக்களிடையே மனித கடத்தல் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளி மாணவிகளிடையே இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மிக அவசியம் ஆகும். மாணவிகளை தவறான வழிகாட்டுதல் மூலமாக அவர்களுக்கு ஆசைகளைத் தூண்டி அவர்கள் படிக்கும் வயதில் தவறான வழிகளுக்குச் செல்லும் சூழலை ஏற்படுத்துகின்றனர். அதை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இதைப்போன்ற விழிப்புணர்பு நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக அமையும்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil