ஆதி திராவிட குடும்பங்களுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு: ஆட்சியர் தகவல்..!

ஆதி திராவிட குடும்பங்களுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு: ஆட்சியர் தகவல்..!
X

இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சங்கீதா 

30 ஆதி திராவிட குடும்பங்களுக்கு ஒரே இடத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீட்டு மனை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

முதலைக்குளம் ஊராட்சியில், 30 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு ஒரே இடத்தில் வீடு ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில், உள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்க வேண்டுமென, ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.இது குறித்து, ஊராட்சி மன்ற நிர்வாகம் செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மனு மீது ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, முதலைக்குளம் கிராமத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார் அப்போது, ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசிக்கும் மக்கள் வீடு இல்லாத நிலையில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வந்த நிலை அறிந்து அவர்கள் வசிக்கும் இடத்திலேயே 30 குடும்பங்களுக்கு ஒரே இடத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீட்டு மனை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து, ஒவ்வொருவருக்கும், ஒதுக்கப்பட்ட இடங்களை அளவீடு செய்து வீடு கட்டும் பணியினையும் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், செல்லம்பட்டி யூனியன் ஆணையாளர்கள் கீதா தங்கப்பாண்டி ,மாவட்ட செயற்பொறியாளர் மற்றும் முதலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers