மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: மதுரை நகரில் கழிவு நீர் வீடுகளில் புகுந்தது
மதுரை கோமதிபுரம், திருக்குறள் வீதியில் தேங்கியுள்ள மழைநீர்:
மதுரையில் பலத்த மழை: கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது
மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. மதுரையில், பெரியார் பஸ்நிலையம், சிம்மக்கல், முனிச்சாலை, கீழவாசல், கோரிப்பாளையம், புதூர், கடச்சனேந்தல், திருப்பாலை, கருப்பாயூரணி, மேலமடை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மதுரை மேலமடையில் பலத்த மழையின் காரணமாக, கழிவுநீரானது, சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில் வீடுகளுக்குள் புகுந்தது.மருதுபாண்டியர் தெரு, அன்புமலர் தெரு, காதர் மொய்தீன் தெருக்களிலும், கழிவு நீர் பெருக்கெடுத்து சாலையில் குளம் போல தேங்கி நின்றது. கோமதிபுரம் தாழை வீதி, திருக்குறள் வீதிகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இது குறித்து, மதுரை மாநகராட்சி ஆணையரிடம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu