உசிலம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது

உசிலம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது
X
உசிலம்பட்டி அருகில் எழுமலையில், கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை, தாடையும் பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் கருப்பையா வயது (60). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, இராமநாதபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா விற்பனை செய்த கருப்பையாவை கைது செய்து, அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!