சோழவந்தான் அருகே சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ .சி .பிறந்த தின விழா
சோழவந்தான் அருகே.முள்ளிபள்ளத்தில் வ .உ. சி .பிறந்த தின விழா
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே, முள்ளி பள்ளம் வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக, சங்கக் கட்டிடத்தில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் 152 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, உறவின்முறை சங்கத் தலைவர் மருத வீரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முருகன் சுந்தர் ஆகியோர் வரவேற்றனர்.சங்கர் தாசன், விவேக், மதன், முனியாண்டி, மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர் .வ உ சி திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து சக்கரை பொங்கல் வழங்கினார்கள்.
வ. உ. சி சிதம்பரம் பிள்ளை தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 5, 1872ல் பிறந்தார். பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் ஆவார். தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூரப்படுகிறார்.
அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக அவரது பங்களிப்பு அளப்பரியது.
அவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். இதுவே, தனது கல்வி முடிந்த பிறகு, அவரைத் தனது தந்தையின் வழியில் தொடர்ந்து செல்ல ஊக்குவித்தது. அவர், தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, ஒட்டப்பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் சட்டப்பள்ளியில் சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்து அவரது தந்தை உலகநாதன் பிள்ளை போலவே ஒரு வழக்கறிஞரானார். ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர் 18, 1936அன்று காலமானார் வஉசிதம்பரம் பிள்ளை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu