உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பன்றிகளை மீட்ட தீயணைப்பு துறையினர்

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பன்றிகளை மீட்ட தீயணைப்பு துறையினர்
X

மதுரை மாலட்டம் உசிலம்பட்டி அருகே கிணற்றில் விழுந்த பன்றிகளை மீட்ட தீயணைப்புத்துறையினர்.

உசிலம்பட்டி அருகே கிணற்றில் விழுந்த 4 பன்றிகளை மீட்டு தீயணைப்புத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது, தோட்டத்தில் உள்ள கிணற்றில் பன்றிகள் விழுந்து கிடப்பதாக, உசிலம்பட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உசிலம்பட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாண்டியராஜனின் தோட்டத்தில் சென்று பார்த்தபோது, கிணற்றுக்குள் 4 பன்றிக்குட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் 4 பன்றிகளை மீட்டு உயிருடன் வனப்பகுதியில் விட்டனர்.

Tags

Next Story
ai solutions for small business