மதுரை அருகே கோழி பண்ணையில் தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழப்பு

செக்கானூரணி அருகே தனியார் கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்தன.
செக்கானூரணி அருகே மின்கசிவு காரணமாக. தனியார் கோழி பண்ணையில் திடீரென தீ விபத்து: நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்த பரிதாபம்:
இதனால், அங்கு பணியில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர். தொடர்ந்து, சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைத்தனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இறந்தன. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே மின்கசிவு ஏற்பட்டு பொருட்கள் சேதம் அடைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் ஒருவித கிலியை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும், கறிக்கோழி வளர்ப்பவர்கள் ஏற்கனவே, நலிவடைந்து வரும் நிலையில் இதுபோன்ற விபத்துகளால் மேலும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், கறிக்கோழி வளர்ப்பு நல வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu