அதிமுக சார்பில், இம்மாதம் உண்ணாவிரதம்..!

அதிமுக சார்பில், இம்மாதம் உண்ணாவிரதம்..!
X

உண்ணாவிரத போராட்ட அறிவிப்பு வெளியிட்டப்போது 

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து வருகின்ற 24-ம் தேதி உண்ணாவிரத போராட்டம்

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து வருகின்ற 24-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் பொதுமக்கள் பெரும்திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி:

சோழவந்தான்:

கள்ளர் சீரமைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசை கண்டித்தும், பள்ளி கல்வி துறையோடு இணைக்கும் முயற்சிகளை கைவிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை, திண்டுக்கல்,தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களில் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற

24-ஆம் தேதி செக்கானூரணி பேருந்து அருகே நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தினை, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் தி.சீனிவாசன் நேரில் ஆய்வு செய்து, உண்ணாவிரதம் தொடர்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் வி. வி. ராஜன் செல்லப்பா,கழக அமைப்புச் செயலாளர் எஸ்.டி. கே ,ஜக்கையன், தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக் கோடைராமர், கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி. வி.ஆர். ராஜ்சத்யன், பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, மாணிக்கம், தவசி, கருப்பையா, டாக்டர் சரவணன், தமிழரசன், நீதிபதி, ஆண்டிபட்டி ஊராட்சி குழுத் தலைவர் லோகிராஜன், தேனி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வி.டி. நாராயணசாமி, ஊராட்சி மன்ற தலைவர் நர்மதா காசிமாயன் ஆகியோர் பங்கேற்றனர்.

மற்றும் இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஜெயராமன், தனராஜன், தேனி ஜெயக்குமார்,வெற்றிவேல், புளியங்குளம் ராமகிருஷ்ணன் ஏ. கே .பி. சிவசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் முருகன், வில்லாபுரம் ராஜா, குமார் ,திருப்பதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், நிலையூர் முருகன், அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி ராஜா, கொரியர் கணேசன், கண்ணன், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் சுதாகரன், சுமதி சாமிநாதன் மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், செல்லம்பட்டி ரகு ,காசிமாயன், சரவணன்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது;

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயமான பிரமலைக் கள்ளர் சமுதாய மக்கள், கல்வி ஒன்றே தங்களது வருங்கால சந்ததியினர் வளர்ச்சி என்பதை உணர்ந்து அமைக்கப்பட்டது தான் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகள் ஆகும்.

இவை அனைத்தும் கள்ளர் காமன் பண்ட் மூலமாகவும், சிலர் தங்கு நிலங்களையும், தங்கள் உழைப்பையும் கொண்டு உருவாக்கியது தான். மதுரை மாவட்டத்தில் 146 பள்ளிகளும்,தேனி மாவட்டத்தில் 84 பள்ளிகளும்,திண்டுக்கல் மாவட்டத்தில் 62 பள்ளிகளும்,என மொத்தம் 292 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளும், அதோடு இணைந்து 57 மாணவர்கள் விடுதிகளும் இயங்கி வந்தன.

இவை அனைத்தும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில், கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனரின் கீழ் இயங்கி வந்தன. தொடர்ந்து, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அதனைத் தொடர்ந்து, எடப்பாடியார் காலங்கள் வரை கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் சிறப்பாக இயங்கி வந்தன.

இதனைத் தொடர்ந்து, விடியா திமுக அரசு கள்ளர் மாணவர் விடுதிகளை பராமரிக்க முடியவில்லை என்ற காரணத்தை கூறி, 2022 ஆம் ஆண்டு கள்ளர் மாணவர்கள் விடுதிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க முயற்சி மேற்கொண்டபோது, கள்ளர் சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இம்முயற்சி அரசின் தொடர் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, கள்ளர் சீரமைப்பு பள்ளிகளையும் பள்ளி கல்வித்துறைக்கு மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர் .

விடியா திமுக அரசின் இந்த நடவடிக்கையால், இதுவரை இச்சமூக மக்களுக்கு கிடைத்து வந்த கல்வி கற்கக் கூடிய தளங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை உரிமைகள் பறிபோகும் அபாய நிலை உள்ளது.

ஆகவே, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க நினைக்கும் திமுக அரசைக் கண்டித்து மதுரை, திண்டுக்கல், தேனி என, மூன்று மாவட்டத்தின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் இங்கு நடைபெறுகிறது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில், மூன்று மாவட்டத்தில் உள்ள தோழமைக் கட்சி நிர்வாகிகள், சமுதாய பெருமக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த உண்ணாவிர போராட்டத்தில், விடியா திமுக அரசுக்கு பாடம் புகட்டும் வகையில், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் மக்கள் நலனில் அக்கறை உள்ள ஒரே கட்சியாகும் என கூறினார்.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!