மதுரை விக்கிரமங்கலம் அருகே வெறிநாய் கடித்து எட்டு பேர் காயம்
பைல் படம்
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கிராமத்தில் வெறிநாய் கடித்ததில் எட்டு பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் , விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்தப்பட்டி எழுவம்பட்டி கொசவபட்டி பகுதிகளில் ,வெறிநாய் தொல்லை அதிகமாக உள்ளது. நேற்று.ஒரே நாளில் எட்டுக்கும் மேற்பட்ட நபர்களை வெறிநாய் கடித்தது. மேலும் ,தெருக்களில் அலையும் நாய்கள் போதிய பராமரிப்பின்றி இருப்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இந்தப் பகுதியில் வயதானவர்கள் மற்றும் வீட்டில் படுத்த படுக்கையாக உள்ள நபர்களை கடிப்பதனால் அவர்களை மருத்துவமனை செல்வதற்கு வழி தெரியாமல் திகைத்து வருகின்றனர்.மேலும், ஆடு பசுமாடு உள்ளிட்ட கால்நடைகளையும் கடித்து குதறுவதால் அவற்றையும் பாதுகாக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் வெறி நாய் கடித்து மருத்துவமனைக்கு சிகிச்சை செல்லும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நோய்கள் ஏற்படுத்தும் வெறி நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் மற்றும் தெருக்களில் திரியும் நாய்களை இன பெருக்கம் செய்ய முடியாதவாறு குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் , நாய்களுக்கு தோல் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால், இந்த தொற்று நோய் பிற நாய்களுக்கு வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இது வரைக்கும் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே கால்நடைத் துறையினர் உடனடியாக நேரில் வந்து கள ஆய்வு செய்து தெரு நாய்களையும் வெறி நாய்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu