மதுரையில் பழுதான லாரியை நடு பாலத்தில் நிறுத்திய டிரைவருக்கு அபராதம்

மதுரையில் பழுதான லாரியை நடு பாலத்தில் நிறுத்திய டிரைவருக்கு அபராதம்
X

லாரியை ,நடு பாலத்தை நிறுத்தி விட்டு சென்ற டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

மதுரையில் பழுதான லாரியை நடு பாலத்தில் நிறுத்திய டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

மதுரை பைபாஸ் சாலை, போடி லயன் வி ஓ சி பாலத்தில் கலவை எந்திரம் கொண்டு செல்லும் லாரி ஒன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து காளவாசல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, விஓசி பாலம் அருகே வரும் பொழுது வாகனம் பழுதாகி நின்றுவிட்டது .

லாரி ஓட்டுநர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, எங்கேயோ சென்றுவிட்டார். இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, சம்பவ இடத்திற்கு சென்ற அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் வாகன ஓட்டுனரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீஸார்,முதலில் போக்குவரத்தை சீர் செய்வதற்கான பணியை மேற்பட்டனர்.

லாரி ஓட்டுனரை தேடும் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் சுமார் முக்கால் மணி நேரத்திற்கு மேலாக லாரி ஓட்டுனர் லாரி அருகே வரவில்லை பின் அதே நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று பின்னால் வந்து கொண்டு இருந்தது.

அந்த ஓட்டுநருடன் உங்கள் மேலாளரின் தொலைபேசி எண்ணை தாருங்கள் என கேட்ட பொழுது எதிர் புறம் மீண்டும் ஒரு அதே நிறுவனத்தின் லாரி பாலத்தில் ஏறி வந்து கொண்டிருந்தது. இருபுறமும் அவர்களது லாரிகள் நின்றதால் மேலும் போக்குவரத்தானது ஸ்தம்பித்தது. துரிதமாக செயல்பட்ட போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடு பாலத்தில் வாகனத்தை நிறுத்தி எங்கேயோ சென்ற ஓட்டுனருக்கு சுமார் 2500 ரூபாய் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் லாரி ஓட்டுனரை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

லாரி ஓட்டுநர் அலட்சியத்தால், சுமார் ஒரு மணி நேரம் பைபாஸ் சாலையில் போடி லைன் மேம்பாலத்தில் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் போக்குவரத்து போலீஸார் துரித செயல்பாட்டால், போக்குவரத்து மீண்டும் சீரானது.

Tags

Next Story