உள்ளாட்சி தேர்தலில் ஊழல் வாதிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்: நிதி அமைச்சர் பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் ஊழல் வாதிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்: நிதி அமைச்சர் பேச்சு
X
மதுரை மாநகராட்சியில் மீண்டும் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பளித்தால் இறைவனே வந்தாலும் மக்களை காப்பாற்ற இயலாது

மதுரை மாநகராட்சியில், மீண்டும் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பளித்தால் இறைவனே வந்தாலும் மக்களை காப்பாற்ற இயலாது என்றார் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மதுரை மாநகராட்சி 56 -வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜென்னியம்மாள் அவர்களை ஆதரித்து பொன்னகரம் பகுதியிலும், மதுரை மாநகராட்சி 59 -ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மகாலெட்சுமி அழகு சுந்தரம், ஆதரித்து வைத்தியநாதபுரம் பகுதியிலும் வாக்கு சேகரித்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,

ஒரு தொகுதியில் 22 வட்ட செயலாளர்களின் பணியை ஒரு சட்டமன்ற உறுப்பினரோ ,அமைச்சரோ செய்திட இயலாது .அதனால் தான் மாமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்றாகும்.எனது தொகுதியை பொருத்தமட்டில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உட்கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளேன் .

ஆனாலும், 100 சதவிகிதம் அந்த பணிகளை முழுமையாக பார்க்க இயலவில்லை என்பது உண்மை. வருகிற தேர்தலில் எந்த அளவிற்கு திமுகவிற்கு வாக்களித்து எந்த அளவிற்க்கு மெஜாரிட்டி ஏற்படுத்தி தருகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நன்மை .5 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தலை நடத்திடாமல் ஊழலுக்காகவே 1000 கோடிக்கு மேல் திட்டங்களை தீட்டி அதனை தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டனர் .

மதுரை மாநகராட்சியில் மீண்டும் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பளித்தால் இறைவனே வந்தாலும் மக்களை காப்பாற்ற இயலாது.. என் மேல் வைத்த நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் இரண்டாவது முறை 34000 வாக்குகள் வித்தியாசத்தில் அளித்த வெற்றி வாய்ப்பின் மூலம் தலைவர் எனக்கு நிதித்துறை ,மனிதவளத்துறை, ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அடங்கிய துறையை கொடுத்து இருக்கிறார். இந்த பொறுப்பை வைத்து மாநிலத்திற்கு பல நன்மைகள் செய்து வருகிறேன்.

கோட்டையில் இருந்து முதலமைச்சர் ஆதரவுடன் என்னால் மதுரைக்கு நிதிகளை ஒதுக்கிட முடியும் .முதலமைச்சர் அறிவித்துள்ள குடிநீர் ,பாதாளசாக்கடை ,வடிகாலுக்காக ஒருங்கிணைத்த மாநகர் திட்டத்தின் கீழ் 500 கோடி ஒதுக்கி உள்ளார் .இத்திட்டம் குறித்து கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்து இருந்தேன்.100 வார்டுகளிலும் 24 மணி நேரமும் 7 நாட்களும் தண்ணீர் கிடைத்திட அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் .

தண்ணீர் திருட்டு நடைபெறாமல் தடுத்து அதனை உங்களிடம் கொண்டு சேர்ப்பது கடமையாகும். இரண்டாவது பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகாலுக்கு முறையான திட்டத்தை உருவாக்கி அடைப்பு இல்லாமல் செய்வது அத்தனையும் நிறைவேற்ற உள்ளோம். மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிகளும் 25 கோடியில் முதலமைச்சர் அறிவிப்பின்படி நடைபெற உள்ளது .

இது போன்ற திட்டப்பணிகளை மக்களுக்கு அருகில் நின்று செயல்படுத்துபவர்கள் மாமன்ற உறுப்பினர்கள்தான். எனவே, அத்தகைய உறுப்பினர்கள் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களாக,கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே இணைந்து செயல்பட்டு எங்களுது கட்டுப்பாட்டில் திட்டப்பணிகளை மக்களிடம் கொண்டு போய் முழுமையாக சேர்க்க முடியும் .எனவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றபெறச் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல்தியாகராஜன்.

Tags

Next Story
ai automation in agriculture