/* */

மதுரையில் அக்.29-ல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்கலாம்

HIGHLIGHTS

மதுரையில்  அக்.29-ல்  மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2021 (வெள்ளிக்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மதுரை விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் வண்ணம் ஒவ்வொரு மாதமும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான, மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமையில் 29.10.2021 (வெள்ளிக்கிழமை)-அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிடையாக நடைபெற உள்ளது.

அக்கூட்டத்தில், விவசாயம் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்கலாம். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கோவியேட்-19 நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின்படி, சமூக இடைவெளியினை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றை தவறாது கடைபிடித்திட வேண்டும்மென்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 25 Oct 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்