சோழவந்தான் அருகே கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரண்ட பக்தர்கள்

சோழவந்தான் அருகே கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரண்ட பக்தர்கள்
X

 வி. கோவில்பட்டி மந்தையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் திரண்ட பக்தர்கள் கூட்டம்.

சோழவந்தான் அருகே கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரண்டனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வி. கோவில்பட்டி மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது. குண்டலபட்டி ரிஷிகேசவன் , சோழவந்தான் பாலமுருகன் ஆகியோர் நான்கு கால யாக பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து, புனித நீர் குடங்களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

காலை 10 29 மணி அளவில் விமான கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. கோவில்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும்.

பங்குனி மாதம் என்பதால், மதுரை மாவட்டத்தில் பல கிராமங்களில் ஆலய ங்களில், பெருந் திருவிழா நடைபெற்று வருகிறது .

அத்துடன் ,கிராம மக்கள் காப்பு கட்டி திருவிழாவில் பங்கேற்று சுவாமிகளை வழிபட்டு வருகின்றனர். பல கிராமங்களில் கோவில்கள் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது .கும்பாபி முன்னிட்டு கோயில்களில் ,பக்தருக்கு அன்னதானங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் விழா குழுவினர் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!