கொரோனா: முன்களப்பணியாற்றியபோது உயிரிழந்த டாக்டர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

கொரோனா: முன்களப்பணியாற்றியபோது உயிரிழந்த  டாக்டர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்
X

பணியின்போது கொரோனா தொற்றால் உயிரிழந்த அரசு டாக்டர்கள் குடும்பத்துக்கு அரசின் நிவாரண நிதி தலா ரூ.25லட்சத்தை வழங்கிய மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர்.

பணியின் போது நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்த முன்கள பணியாளர்களான 5 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டது

கொரோனா நோய்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த முன்கள பணியாளர்களான 5 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தொகை ரூ.25 இலட்சத்திற்கான காசோலையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்:

கோவிட்-19 கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியின் போது நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்த முன்கள பணியாளர்களான 5 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தொகை தலா ரூ.25 இலட்சம் என, மொத்தம் 1 கோடியே 25 இலட்சத்திற்கான காசோலையினை, உயிரிழந்த மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார். இந் நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (சுகாதாரம்)வெங்கடாசலம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!