ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்..!

ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்..!
X

படிக்கட்டுகள் உடைந்த நிலையில் அரசு நகர பேருந்து.

சோழவந்தான் அரசு பணிமனையில் இருந்து இயக்கப்படும் நகர பேருந்துகள் பயணிகள் பயணிப்பதற்கு தரமற்றதாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சோழவந்தான் அரசு பணிமனையில் இருந்து இயக்கப்படும் நகர பேருந்துகள் பயணிகள் பயணிப்பதற்கு தரமற்றதாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில், பெரும்பாலான பஸ்கள் ஆபத்தான நிலையில் இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில், சுமார் 40-க்கும் மேற்பட்ட அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலான பஸ்கள், படிக்கட்டுகள் உடைந்தும், மழைக் காலத்தில் பஸ்சுக்குள் அருவி போல கொட்டும் நிலையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மதுரை மாட்டுத்தாவணியில், இருந்து சோழவந்தான் வரை இயக்கப்படும் அரசுப் பேருந்து படிக்கட்டுகள் உடைந்து ஆபத்தான நிலையில் இயக்கப் படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து,பல தடவை சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அலுவலர்களிடம் புகார் செய்தும், அரசு பஸ்களை சீரமைக்க ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது. சோழவந்தான் அரசு டெப்போவிற்கு புதிய பஸ்கள் வழங்க,அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் இருக்கின்ற பஸ்களை முழுமையாக பராமரிப்பு செய்யப்படவேண்டும். பஸ்களின் கூரைகளில் இருக்கும் ஓட்டைகளை மூடவேண்டும். படிக்கட்டுகளில் பெரும்பாலான மாணவர்கள் தொங்கிக்கொண்டு வருவது வழக்கம். உடைந்த படிக்கட்டுகளால் விபரீதம் ஏற்படுவதற்குள் படிக்கட்டுகளை சீரமைக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!