மதுரை அருகே, செக்கானூரணியில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!

மதுரை அருகே, செக்கானூரணியில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!
X

செக்கானூரணியில் ,குற்றத் தடுப்பு விழிப்புணர்வு .

மதுரை அருகே, செக்கானூரணியில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

உசிலம்பட்டி அருகே குற்ற தடுப்பு விழிப்புணர்வு

மதுரை, உசிலம்பட்டி அருகே சைபர் குற்ற தடுப்பு குறித்து காவல்

துறை மற்றும் மாணவ மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, செக்காணூரணியில் மதுரை மாவட்ட சைபர் குற்ற தடுப்பு பிரிவு காவல் துறையினர் சார்பில், சைபர் குற்ற தடுப்பு காவல்துறையினர் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியின் என்சிசி, என்எஸ்எஸ் மாணவ மாணவிகள் இணைந்து சைபர் குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்


செக்காணூரணி அரசு மேல்நிலைப்பள்ளியில், மதுரை மாவட்ட சைபர் குற்ற தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி கருப்பையா மற்றும் மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு டிஎஸ்பி நாகராஜ் இணைந்து இந்த பேரணியை துவக்கி வைத்தனர்.

செக்கணூரணியின் முக்கிய வீதிகளான மதுரை ரோடு, திருமங்கலம் ரோடு, தேனி ரோடு வழியாக மீண்டும் பள்ளியிலேயே நிறைவுற்றது., தொடர்ந்து, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் கோசங்கள் எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!