மதுரை மாவட்டத்தில் பிசி, எம்பிசி இன மக்களுக்கு கடனுதவி வழங்கும் முகாம்
மதுரை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களுக்கான பொருளாதார கடன் உதவி வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பொதுக்கடன், புதிய பொற்காலதிட்டம், சிறுவணிககடன் ஆகிய கடன் திட்டத்தின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கிடவும் அல்லது ஏற்கெனவே, செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன் பெறலாம். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலமாக பொதுக்காலக்கடன், கைவினைஞர்களுக்கான விராசத்திட்டம், கல்விக்கடன் மற்றும் சிறுவணிகக்கடன் ஆகிய கடன் திட்டத்தின்கீழ் குறைந்தவட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி ,டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முகாம் பின்வருமாறு நடைபெறுகிறது.
முகாம் நடைபெறும் வட்டம், முகாம் நடைபெறும் இடம், முகாம் நடைபெறும் நாள்,
14.12.2021 - உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம், செல்லம்பட்டி.
21.12.2021- வட்டாட்சியர் அலுவலகம், பேரையூர்.
28.12.2021-வட்டாட்சியர் அலுவலகம், திருமங்கலம்.
04.01.2022-திருமங்கலம்,ஆ.கொக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (செக்கானூரணி).
எனவே தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த மக்கள் மேற்படி கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டு, விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu