பணம் பறித்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளருக்கு நீதிமன்ற காவல்
![பணம் பறித்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளருக்கு நீதிமன்ற காவல் பணம் பறித்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளருக்கு நீதிமன்ற காவல்](https://www.nativenews.in/h-upload/2021/08/27/1266655-img-20210827-wa0010.webp)
பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் வசந்தி.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடம் நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணி புரிந்த பெண் ஆய்வாளர் வசந்தி என்பவர் 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ 10 லட்சம் பணம் பறித்ததாக போலிசார் வழக்குபதிவு செய்த அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு விசாரணையை தனிபடை போலிசார் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வழக்கில் தொடர்புடைய பால்பாண்டி, செட்டியார் என்ற உக்கிரபாண்டி, கார்த்திக் என்ற சீமைச்சாமி ஆகிய 3பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 2லட்சத்தி 26ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். இதனிடையே, பெண் ஆய்வாளர் வசந்தியின் சார்பில் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் காவல் ஆய்வாளரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு நீதிமன்றம் அறவுறுத்தியிருந்தது.
இதையடுத்து, ஆய்வாளர் வசந்தியை, கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளிலும் தேடிவந்தனர். அவரது செல்போன் நம்பரை சோதனை செய்து பார்த்தனர். அப்போது, வசந்தி அவரது சகோதரர் குண்டு பாண்டியராஜ் ஆகிய இருவரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மதுரை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி ரவிக்குமார் தலைமையில் தனிப்படையினர் கோத்தகிரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு விடுதியில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து மதுரை அழைத்துவந்தனர்.
பின்னர், இன்று காலை மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின்னர் இருவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, வசந்தி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணை உள்ளதால், ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கண்ணன் என்ற வழக்கறிஞர் குறுக்கீட்டு மனு அளித்தார். இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் ஆய்வாளர் வசந்தி மற்றும் அவரது சகோதரர் பாண்டியராஜ் ஆகிய இருவருக்கும் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அனுராதா உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu