சிறப்பு ரயில்களை சாதாரண ரயில்களாக மாற்றும் பணி தொடக்கம்
பைல் படம்
சிறப்பு ரயில்களை சாதாரண ரயில்களாக ஆக்கும் பணிகள் ஏழு நாட்களில் பணி முடியும் எனவும், முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட தகவல்: கோவிட் காலத்தில் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்ட பல்வேறு ரயில்களை சாதாரண ரயில்களாக மாற்ற வேண்டும் என்றும் , முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும் எனவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டோம்.
அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நாளுக்கு நாள் கிடைத்து வருகிறது. பொதுப்பெட்டிகள் இணைப்பு உள்ளிட்ட நான் எழுப்பிய பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முக முக்கியமான வெற்றியை பெற்றுள்ளோம். கோவிட் காலத்தில் ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டு அதன் கட்டணமும் உயர்த்தப்பட்டிருந்தது. எனவே அதனை மீண்டும் சாதாரண ரயில்களாக மாற்றி , கட்டணத்தினை குறைக்க வேண்டுமென ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தேன். அதில் மிக முக்கியமான வெற்றி கிடைத்துள்ளது.
சிறப்பு ரயில் வண்டிகளை சாதாரண ரயில் வண்டிகளாக மாற்றுவதற்கு அவற்றின் எண்களை இணையத்தில் பதிவேற்றும் பணி நேற்று இரவு துவங்கியது. இரவு பதினொன்றரை மணி முதல் காலை ஐந்தரை மணி வரை ஆறு மணி நேரம் இந்த பணி நடைபெறும். நவம்பர் 14 & 15 தேதிகளில் தொடங்கிய இந்தப் பணி ஏழு நாட்கள் படிப்படியாக நடைபெறும். நேற்று இரவு முதல் கட்டமாக 28 வண்டிகள் எண்கள் மாற்ற திட்டமிடப்பட்டது.இந்த ஏழு நாட்களில் ஆறு மணிநேர காலத்தில் பயணிகள் பயணச்சீட்டுகளை பதிவு செய்ய இயலாது. எண்கள் மாற்றப்பட்டு ரெகுலர் வண்டிகளாக ஆக்கப்பட்டபின் வழக்கமான கட்டணமும், முதியோர் சலுகை உட்பட மற்ற சலுகைகளும் நடைமுறைக்கு வரும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர். சு வெங்கடேசன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu