பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்

பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்
X

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ரேசன் கடை பணியாளர்களுக்கு கொரோனா கால படியாக தினசரி ரூ. 200 வழங்க வேண்டும்:

மதுரை மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு பத்து மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை வழங்க வேண்டும். நகைக் கடன் தள்ளுபடியால் நலிவடைந்துள்ள தொடக்க கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்து மக்கள் சேவையாற்ற அரசு நிதி வழங்க வேண்டும்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு தினசரி படியாக ரூ. 200 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, மாநில பொதுச் செயலர் பி.காமராஜ் பாண்டியன், மதுரை மாவட்டச் செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் ஆகியோர் கூறியது:

கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடியால், நிதி பற்றாக்குறையில் சிக்கி, செயல்பட இடையூறாக உள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பரிசீலைன செய்து கூட்டுறவு சங்கங்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags

Next Story