நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது
X

கைது செய்யப்பட்ட ஜெகதீசன்.

உசிலம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய எழுத்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடமிருந்து, 16,620 ரூபாய் லஞ்சம் பெற்ற பில் கிளார்க்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள அம்பட்டையம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனது 7 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல்சாகுபடி செய்து கடந்த 14 ஆம் தேதி அம்பட்டையம் பட்டியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வந்துள்ளார்.

அரசின் கொள்முதல் நிலையத்தில் பில் கிளார்க் ஆக பணியாற்றி வரும் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ஜெகதீசன், விவசாயியின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் வீதம் 277 மூட்டைகளுக்கு 16620 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயி முருகன் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் செய்த ஏற்பாட்டின் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயி முருகன், பில் கிளார்க் ஜெகதீசனிடம் கொடுத்த போது, கையும் களவுமாக மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமை யிலான போலீசார் ஜெகதீசனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!