/* */

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் வயலில் இறங்கி குறை கேட்ட தமிழக முதல்வர்

கிராம மக்களுடன் கலந்துரையாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது மக்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்

HIGHLIGHTS

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் வயலில் இறங்கி குறை கேட்ட தமிழக முதல்வர்
X

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் வயலில் வேலை செய்த பெண்களிடம் குறைகளைக் கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ல் கலந்துகொண்டு கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் கிராமங்களைத் தவிர்த்து அனைத்து ஊராட்சிகளிலும் இன்று (அக்-2) கிராம சபை கூட்டம் நடந்தது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாப்பாபட்டி கிராமத்துக்கு சென்றார். நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி உள்ளிட்ட வழி எங்கும் சாலையில் இருபுறமும் பொதுமக்கள், தி.மு.க.வினர் திரண்டு நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாப்பாபட்டி சென்றடைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கிராம மக்கள் வரவேற்றனர். அங்கு கிராம சபை கூட்டத்துக்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் முன்புறம் திரளான கிராம மக்கள் அமர்ந்திருந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

ஊராட்சி நிதி செலவினம், கொரோனா தடுப்பூசியின் அவசியம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், பாப்பாபட்டி ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள், ஊட்டச்சத்து இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் பயன்படுத்துதல், கிராம சுகாதார திட்டம், மின்சார சிக்கனம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கிராம மக்களுடன் கலந்துரையாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அதன் பிறகு, பாப்பாபட்டியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களிடம் நேரில் சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், மதுரைக்கு வரும் வழியில், கே.நாட்டார்பட்டி வேளாண் கூட்டுறவு வங்கியில்,கூட்டுறவுத்துறை சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று, 20 பயனாளிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் பால் மாட்டு கடன் உதவிகள் வழங்கினார்.

பின்னர், மதுரை வந்த மு.க.ஸ்டாலின், மேலமாசி வீதியில் உள்ள மகாத்மா காந்தி மேலாடையை துறந்த இடத்துக்கு சென்றார். அங்கு காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கதர் விற்பனையையும் தொடங்கி வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்கள் மற்றும் அவர் செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Updated On: 2 Oct 2021 11:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!