உசிலம்பட்டி அருகே ரத்த தானம், இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

உசிலம்பட்டி அருகே ரத்த தானம், இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
X

மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். 

செல்லம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டியில், இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, செல்லம்பட்டி தெற்கு ஒன்றியம் மற்றும் மதுரை (பிரீத்தி) தனியார் மருத்துவமனை இணைந்து செல்லம்பட்டி சீலக்காரி அம்மன் கோவில் வளாகத்தில், நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாமை, மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் துவக்கி வைத்தார்.

முகாமில், சர்க்கரை, ரத்த அழுத்தம், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துராமன் ரத்ததானம் வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில், அவைத்தலைவர் அம்மாவாசி, துணைச் செயலாளர்கள் காசி, ராமேஸ்வரி மணி, ராஜூ, பொருளாளர் ஒச்சு, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் பி.டி மோகன் கோவிலாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி, மாவட்ட பிரதிநிதிகள் நீதி, பவுன்சாமி, செல்லப்பாண்டி உசிலம்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித் பாண்டி ,செல்லம்பட்டி இளைஞரணி ஜெயா பிரபு, ஒன்றியக் கவுன்சிலர் அரவிந்தன் மற்றும் நிர்வாகிகள் முல்லை மூவேந்தன், வினோத்‌ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!