பேரையூர் அருகே டாஸ்மாக் கடைகளை அகற்ற பா.ஜ.க. நிர்வாகி கோரிக்கை
பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத்தலைவர்
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சாப்டூர் வடகரைபட்டியில் 2 டாஸ்மார்க் கடைகளை அகற்ற கோரி பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத்தலைவர் வலசை முத்துராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
பேரையூர் அருகே உள்ள சாப்டூர் வடகரை பட்டியில் டாஸ்மாக் கடை எண் 5541 மற்றும் 5531 ஆகிய இரண்டு கடைகள் உள்ளது. உள்ளூர் மக்களால் கொண்டாடப்படும் பெரிய திருவிழாவின் போது, அந்த ஊர் அம்மனுக்கு வடகரைபட்டியிலிருந்து முளைப்பாரி மற்றும் சாமியை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி பல நூறு வருடங்களாக நடந்து வருகிறது.
மேலும் ,சித்திரை திருவிழாவை முன்னிட்டு ,மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் அதே நாளில் சாப்டூரிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பாக நடைபெறும். அழகர், சொக்கர், மீனாட்சி இந்த வடகரை பட்டியல்தான் இரண்டு நாளாக தங்கி சுமார் 20 ஆயிரம் மக்களுக்கு அருள் புரிவார்கள். அப்படி நடக்கும் ஒரு பெருவிழாவில் அழகர்சாமி இருக்கும் இடத்திற்கும், டாஸ்மாக் கடைக்கும் 100 அடி தூரத்தில் உள்ளது.
சுமார் இரண்டு அடியில் கனரா வங்கி கிளை உள்ளது. இங்கு பெண்கள் மகளிர் குழு நடத்துபவர்கள் பணம் எடுப்பதற்கும், நகை அடமானம் வைப்பதற்கு ஏராளமான பெண்கள் தினந்தோறும் வருகிறார்கள். அப்படி வரும் பெண்களுக்கு இந்த டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் மது பிரியர்கள் பெண்களை ஆபாசமாக பேசுகிறார்கள். அதனால், இந்த வங்கிக்கு வரும் பெண்களும் ஏன் ஆண்களுமே மிகவும் அச்சத்துடன் வந்து செல்கிறார்கள்.
மேலும், டாஸ்மார்க் கடை அருகே 20 அடியில் பெட்ரோல் பங்க் இருக்கிறது. 100 அடியில் வனக் காவலர் குடியிருப்பு இருக்கிறது. ஆயிரம் அடியில் ஆரம்பக் கல்வி நிலையம் மிகப் பழமையானது உள்ளது. ஒரு கிலோ மீட்டரில் ஆண்கள் மற்றும் பெண்கள் படிக்கும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 300 அடியில் வடக்கத்தி அம்மன் கோயில் உள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் இருக்க கூடாது என்பது விதி. இதைப் பொருட்படுத்தாமல் ஒரு கடைக்கு இரண்டு கடையாக டாஸ்மாக்கை திறந்துள்ளனர்.
இந்த இரண்டு டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால், பொதுமக்கள் அனைவரும் உண்ணாவிரதம் மற்றும் மிக பெரிய அளவில் மறியல் போராட்டமும் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கடையை அகற்றாவிட்டால், பெரிய போராட்டம் வெடிக்கும் என்பதையும் இதன் மூலமாக தெரிவித்து கொள்கிறேன்.
எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த இரு கடைகளையும் அகற்ற உடனே உத்தரவிடுமாறு கேட்டு கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu