மதுரை அருகே கல்லூரியில் பசுமை பற்றிய விழிப்புணர்வு
மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற பசுமை விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள்
மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரி, மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்வி கவுன்சிலின் கீழ் கேம்பஸ் நர்சரி மூலம் வளாகத்தில் பசுமையை வலுப்படுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தியது. கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன், கல்லூரி வளாகத்தில் பசுமை வளர்ச்சி பற்றிய விபரங்களை கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் தானாக முளைத்த புங்கை மற்றும் மகிழ மர நாற்றுகளை எடுத்து கேம்பஸ் நர்சரியில் பராமரித்தனர். கல்லூரியின் அகத்தர் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் சௌந்தரராஜு ஆகியோர் கேம்பஸ் நர்சரியின் அவசியத்தை மாணவர்களிடையே விளக்கினர்.
கேம்பஸ் நர்சரியிலிருந்து, மாணவர்களால் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை வளாகத்திலேயே பசுமையை உயர்த்தும் எண்ணத்தில் நடப்பட்டன. கேம்பஸ் நர்சரியின் அவசியத்தை நன்கு ாஉணர்ந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu