சாலை மேம்பாடு பணிகள் மேற்கொள்ள உரிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர்
மதுரை மாவட்டத்தில் சாலைகள் மேம்பாடு மற்றும் பராமரிக்கும் பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் சென்னை, வழிகாட்டுதலின்படி, சாலைகள் மேம்பாடு மற்றும் பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளும் பொழுது, சாலைகள் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணித்தளத்தில் பெயர் பலகை மற்றும் அலுவலக தொடர்பு எண் விவரங்கள் வைக்கப்பட வேண்டும்.
தெருக்களில் சாலைப் பணிகள் மேற்கொள்ளும் பொழுது அச்சாலையானது வீடுகளின் தரைமட்ட அளவை விட உயரமாகக் கூடாது. கிராம பகுதிகளில் தெருக்களில், இருபுறமும் சாக்கடை வசதியுடன் கூடிய சாலைகள் அமைவதை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்தப்புள்ளி ஒப்பந்தத்தில், இது விவரம் குறிப்பிடப்பட்டு தொடர்புடைய ஒப்பந்தகார்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும். நடைபெறும் சாலைப் பணி மீதான புகார் இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசரின் உத்தரவு விபரங்களை தொடர்புடைய அலுவலகங்களில் "தகவல் பலகை"-இல் ஒட்டி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu