பணி நிரந்தரம் கோரி உசிலம்பட்டியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி உசிலம்பட்டியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X
பணி நிரந்தரம் கோரி உசிலம்பட்டியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உசிலம்பட்டி அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2021 சட்டமன்ற தேர்தலின் போது 313வது தேர்தல் அறிக்கையாக திமுக அரசு அறிவித்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், குறைந்தபட்ச ஊதியமாக ஊழியர்களுக்கு 26 ஆயிரம் மற்றும் உதவியாளர்களுக்கு 21 ஆயிரம் வழங்க கோரியும், காலிப்பணியிடங்களை நிரப்ப கோரியும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு உசிலம்பட்டி வட்டார அளவில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு ஊழியர்களும் இரண்டு மூன்று அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் சூழல் நிலவி வருவதாகவும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப கோரியும், அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரியும் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil