உசிலம்பட்டி அருகே ,விக்கிரமங்கலத்தில், அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..!

உசிலம்பட்டி அருகே ,விக்கிரமங்கலத்தில், அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..!
X

தேனி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி  ,வாக்கு சேகரிப்பு.

எனக்கு மாலை மரியாதையுடன் இவ்வளவு வரவேற்பா இதை பார்க்க எனது அப்பா அம்மா உயிரோடு இல்லையே தேர்தல் பிரசாரத்தில் தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி உருக்கம்.

எனக்கு மாலை மரியாதையுடன் இவ்வளவு வரவேற்பா இதை பார்க்க எனது அப்பா அம்மா உயிரோடு இல்லையே தேர்தல் பிரசாரத்தில் தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி உருக்கம்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இன்று மாலை பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது, வாக்காளர்களிடம் பேசிய போது சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் ஒன்றிய செயலாளர் பதவி வழங்கி அழகு பார்த்தார்.

தற்போது, தேனி நாடாளுமன்ற வேட்பாளராக என்னை அறிவித்துள்ளார். இந்த நிலையில், வாக்குகள் கேட்டு உங்களிடம் வந்தபோது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மலர்கள் தூவி எனக்கு மரியாதை செய்த போது, இந்த வாய்ப்பை வழங்கிய எடப்பாடியார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் , எனது இந்த நிலைமையை பார்ப்பதற்கு எனது அப்பா அம்மா உயிரோடு இல்லையே என இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்பதாக நா தழுதழுக்க கூறினார்.

என்னை வெற்றி வெற்றி பெறச் செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் 58 கிராம கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தருவேன். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று கூறினார். இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன் ,பிவி கதிரவன், தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் துரை தன்ராஜ் ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா, இலக்கிய அணி ரகு ,வழக்கறிஞர் குருவித்துறை காசிநாதன் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings