வாடிப்பட்டி அருகே அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா..!

வாடிப்பட்டி அருகே அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா..!
X

அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா.

வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பில் கட்சியின் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்தது

வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பில் கட்சியின் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்தது.

வாடிப்பட்டி:

மதுரை,வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பில் வாடிப்பட்டி அருகே உள்ள சாணாம் பட்டி தனியார் மஹாலில் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் குமார் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா வரவேற்புரை ஆற்றினார்.


முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம். வி. கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், வாடிப்பட்டி வடக்கு மு. காளிதாஸ், தெற்கு கொரியர் கணேசன் ,மதுரை மேற்கு தெற்கு அரியூர் ராதாகிருஷ்ணன்,செல்லம்பட்டிஎம். வி.பி .ராஜா மகளிர் அணி லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கி, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில், மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் துரை தன்ராஜ்,வெற்றிவேல், திருப்பதி,ரகு, சந்தனத்துறை , தனசேகரன், கச்சைகட்டி ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில்,அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

Tags

Next Story