Admk Booth Committee Meet சோழவந்தானில் அதிமுக சார்பில், பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் :முன்னாள் அமைச்சர் பங்கேற்பு:

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் .
Admk Booth Committee Meet
சோழவந்தானில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், சோழவந்தானில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச்செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
Admk Booth Committee Meet
சோழவந்தானில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்.
முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். இதில், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல், துணைச் செயலாளர் துரை தன்ராஜ், இலக்கிய அணி மாவட்டச்செயலாளர் ரகு, மருத்துவ அணி செயலாளர் கருப்பட்டி கருப்பையா, சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி , தென்கரை இராமலிங்கம், முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன்,இளைஞர் அணி கேபிள் மணி, பேரூர் துணை செயலாளர் தியாகு, ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மாரி, முத்துக்குமார், சுரேஷ்குமார், பாலா, மருதுசேது, சபரிமலை, ஜூஸ் கடை கண்ணாடி எஸ் எம் டி நாகராஜ், பாசறை அழகர், ஜெயபிரகாஷ்,வட காடு பட்டி கிளைச் செயலாளர் பிரபு, மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி ,ராமு, மேலக் கால் காசிலிங்கம், ராஜா, குருவித்துறை விஜய் பாபு, மன்னாடிமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜன் உள்பட வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், பேரூர் இளைஞரணி செயலாளர் கேபிள் மணி நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu