58 கிராம கால்வாய் திட்டத்துக்கு பி.என். வல்லரசு பெயர்..!

58 கிராம கால்வாய் திட்டத்துக்கு பி.என். வல்லரசு பெயர்..!
X

பெயர்மாற்றக்கோரிகை நிறைவேற  விவசாயிகள் சாமிக்கு பூஜை செய்தனர்.

58 கால்வாய் திட்டத்துக்கு, வல்லரசு பெயர் சூட்டப்படவேம்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

58 கால்வாய் திட்டத்துக்கு, வல்லரசு பெயர் சூட்டப்படவேம்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

உசிலம்பட்டி :

மதுரை,உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு நிரந்தர அரசாணையில் வல்லரசு 58 கிராம கால்வாய் என,அரசு பெயர் சூட்ட வேண்டும் என, நாகமலையான் அய்யன் சாமிக்கு, கிடாய்கள் வெட்டி வேண்டுதல் செய்த விவசாய சங்கத்தினர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாய் சங்கத்தின் சார்பில், வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. தொட்டிபாலத்தில் தண்ணீர்திறந்துவிட வேண்டும் என மூன்று வருடத்திற்கு முன்பு உசிலம்பட்டியில் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

சென்றாண்டு உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள 33 கண்மாய்களுக்கு நீரை கொண்டு சென்று நிரப்பி கொடுத்தற்கு நன்றி செலுத்தும் தமாகவும் 58 கால்வாய் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று 58 கால்வாய் அருகே உள்ள நாகமலையான் அய்யன் சாமிக்கு இரண்டு கிடாய்கள் வெட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி சாமியிடம் வேண்டுதல் செய்தனர்.

பின்னர், 58 கால்வாய் சங்கத்தின் சார்பில் வைகை அணையிலிருந்து 58 கால்வாய்க்கு 65 அடியில் நீர் திறக்க நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும், 58 கால்வாய் திட்டத்திற்காக உழைத்திட்ட மறைந்த முன்னாள் எம்எல்ஏ வல்லரசு பெயரை வல்லரசு 58 கிராம கால்வாய் என,அரசு பெயர் சூட்ட வேண்டும் என விவசாயிகள் நாகமலையனிடம் கோரிக்கை வைத்தனர். இதில், 58 கால்வாய் சங்கத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு வேண்டுதல் செய்து வழிபட்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!