சோழவந்தான் அருகே ரவுடி கொலை வழக்கில் 3 பேர் கைது
ஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி குண்டார் சக்திவேல் வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் குண்டார் என்ற சக்திவேல் (37). பிரபல ரவுடியான இவர் மீது, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், நேற்றுமுன்தினம் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில் , திண்டுக்கல்லில் இருந்து சோழவந்தான் வழியாக தனது சொந்த ஊரான திருமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மேலக்கால் அரசு பள்ளி அருகே வந்தபோது ,இவரை வழிமறித்த மர்ம நபர்கள் வெட்டினர். இதில், ரவுடி சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த காடுபட்டி போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று கொலை குற்றவாளிகள் ரமேஷ்பாபு (28), சுகுமார் (29), அலெக்ஸ்குமார் (28) ஆகிய மூவரும் மதுரை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் கொலை வழக்கில் ஆஜராகினர். மேலும், இவர்களின் நண்பர் மணிகண்டனை, குண்டார் சக்திவேல் கொலை செய்த காரணத்திற்காக பழிக்குபழியாக நேற்றுமுன்தினம் குண்டாறு சக்திவேலை வெட்டி கொலைசெய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கைதான குற்றவாளிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu