உசிலம்பட்டி அருகே இருசக்கரவாகனத்தில் வைத்திருந்த 2.5 லட்சம் பணம் திருட்டு

உசிலம்பட்டி அருகே இருசக்கரவாகனத்தில் வைத்திருந்த 2.5  லட்சம் பணம் திருட்டு
X
வாகனத்தில் வைத்திருந்த பணத்தை ஒரு நபர் எடுத்து தனது கூட்டாளிகளிடம் கொடுக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மூவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியரான செல்வராஜ். இவர் இரண்டரை லட்சம் ரொக்க பணத்தை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துவிட்டு கவணம்பட்டி சாலையில் உள்ள இரும்பு கடையில் பொருட்களை வாங்கி கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் இருந்த இரண்டரை லட்சம் ரொக்கத்தை மர்ம நபர் திருடி சென்றனர்

செல்வராஜ் தனது மனைவியின் செயினை அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த இரண்டரை லட்சம் ரொக்க பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு செல்வதைப் பார்த்து விட்டு மர்ம நபர்கள் மூன்று பேர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். செல்வராஜ் இரும்பு கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது, அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை ஒரு நபர் எடுத்து, இருசக்கர வாகனத்தில் செல்லும் மற்ற இருவரிடம் கொடுத்துவிட்டு பின் தொடர்ந்து ஓடி தப்பிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!