உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவருக்கு 10 ஆண்டு சிறை

உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவருக்கு 10 ஆண்டு சிறை
X

10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சக்தி.

உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

உசிலம்பட்டி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, சின்னக் குறவடியைச் சேர்ந்த சக்தி என்ற கூலி தொழிலாளி அவரது வீட்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அந்த ஆண்டு உசிலம்பட்டி காவல் ஆய்வாளராக இருந்த ( தற்போது காவல் துணைக் கண்காணிப்பாளர்) ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சின்னக்குறவடியில் உள்ள சக்தி என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை செய்த போது, அவரது வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

இந்த பதுக்கல் தொடர்பாக போலீசார் சக்தியை கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவினை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, குற்றவாளியான சின்னக்குறவடியைச் சேர்ந்த சக்தி என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!