மல்லாங்கிணற்றில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டம்: அமைச்சர் தொடக்கம்

மல்லாங்கிணற்றில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டம்: அமைச்சர் தொடக்கம்
X

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பகுதியில் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் தங்கம்தென்னரசு

நகரங்களில் வசிக்கும் மக்களில் ஏழைகளாக உள்ள 38 % பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, 2015-ம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் நகரங்களில் வசிக்கும் மக்களில் 38 சதவீத நபர்கள் ஏழைகளாக உள்ளதால், வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திறனற்றவர்கள், பாதி திறன் உடையவர்கள், முழு திறன் உடையவர்கள் என்று நகர ஏழைகளை 3 ஆக பிரித்து பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், நகரங்களில் உள் கட்டமைப்பை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், வெள்ளகால மீட்பு பணி, பசுமையாக்கல், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை தினக்கூலி அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

Tags

Next Story