வரும் 30 ஆம் தேதி ஆளுநர் நடத்தும் துணைவேந்தர் ஆலோசனை கூட்டம்: முதல்வர் முடிவு எடுப்பார்
வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி
வரும் 30ஆம் தேதி ஆளுநர் நடத்தும் துணைவேந்தர் ஆலோசனை கூட்டம் தொடர்பாக முதலமைச்சரே உரிய கருத்தை தெரிவிப்பார் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி.
மதுரை தனியார் மருத்துவமனை வளாகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி மேலும் கூறியதாவது: வரும் 30ஆம் தேதி ஆளுநர் துணைவேந்தரை சந்திப்பதைத் பொருத்தவரையில் முதலமைச்சர் உரிய கருத்தை தெரிவிப்பார்.
ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் முதன்மை அதிகாரிகளோடும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் பேசி நல்லதொரு முடிவு எடுப்பார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதற்காக நாளை மதுரை வருகிறார். மேலும் மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.
முந்தைய அதிமுக அரசு எந்த திட்டம் கொண்டு வந்தார்கள், எதை நாங்கள் தடுத்தோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த காப்பீட்டு திட்டத்தைக் கூட தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்படக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.பத்திரிகை மற்றும் நாட்டு மக்கள் பாராட்டும் வகையில், உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களில் நடத்தி பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றோம். தவறு எங்கே நடந்தது எங்கே முறைகேடு நடந்தது என்பதை தெளிவாக சொல்ல வேண்டும் எந்த காரணமும் இல்லாமல் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் குறை சொல்லி வருகிறார். ஆனால், இந்த அரசை பற்றி நல்லபடியாக பொதுமக்கள் புரிந்து வைத்துள்ளார்கள் அதுவே எங்களுக்குப் போதுமான ஒன்று என்றார் அமைச்சர் பி. மூர்த்தி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu