ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடத்தில் சுற்றுலா இயக்குநர்-ஆட்சியர் ஆய்வு
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்திப் நந்துாரி இடம் தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கென்று பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் இடத்தை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்திப் நந்துாரி இடம் தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர், உலகபுகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கென்று பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து ,மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஊராட்சி ஒன்றியம், கீழக்கரை மற்றும் சின்ன இலந்தைக்குளம் ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டுக்ககென்று பிரம்மாண்டமான மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்திப் நந்துாரி இடம் தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லுரர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் உட்பட பல்வேறு கிரமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலககளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இப்போட்டிகளை காண தமிழ்நாடு மற்றுமின்றி பல்வேறு உலகநாடுகளில் இருந்து பொதுமக்கள் நேரடியாக வந்து பார்வையிட்டு வருகின்றனர். இப்பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டினை மேலும் உலகளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் ஜல்லிக்கட்டுக்கென்று பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிப்பினை தொடர்ந்து, மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஊராட்சி ஒன்றியம் கீழக்கரை மற்றும் சின்ன இலந்தைக்குளம் ஆகிய கிராமங்களில் மாவட்ட அட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் சுற்றுலாத்துறை இயக்குநர் சந்திப் நந்துாரி ஆகியோர் மைதானத்திற்கு தேவையான இடம் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும், மைதானத்திற்கு வரும் சாலைகள் மற்றும் அடிப்படை தேவைகள் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள். மைதானம் அமைவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் விரிவான திட்ட அறிக்கையினை தயார்செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்தஆய்வின்போது, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ரகுநாதன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் குமார் , மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராசு, வாடிப்பட்டி வட்டாட்சியர் நவநீதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu