திருமங்கலம் நகராட்சி 4 -வது வார்டு பாஜக கட்சியின் வேட்பாளர் தீவிர பிரசாரம்

திருமங்கலம் நகராட்சி 4 -வது வார்டு பாஜக கட்சியின் வேட்பாளர் தீவிர பிரசாரம்
X

திருமங்கலம் நகராட்சி 4 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எஸ் .விஜேந்திரன் வீதி வீதியாக சென்று பிரசாரம்

திருமங்கலம் நகராட்சி 4 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எஸ் .விஜேந்திரன் வீதி வீதியாக சென்று பிரசாரம்

திருமங்கலம் நகராட்சி 4வது நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எஸ். விஜேந்திரன் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

பொது மக்கள் மனதை கவரும் வகையில் வாக்குறுதி. மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி 4வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எஸ். விஜேந்திரன் குதிரை சவாரி குளம் பகுதியில்பிரசாரம் மேற்கொண்டார் . பிரச்சரத்தின் போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின் போது எஸ் .விஜேந்திரன் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்களாக விநியோகம் செய்தார். வாக்குறுதியில் ஏழை குடும்பங்கள் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் இறுதிச் சடங்கு செலவுகள் அனைத்தும் தானே செலவழிப்பதாக வாக்குறுதி அளித்தார். திருமணம் நிகழும் பெண்களுக்கு நான்கடி குத்துவிளக்கு வழங்கப்படும் ,4வது வார்டு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நிசான்- கிசான் மத்திய அரசு திட்டத்தின் மூலம் .அனைத்து விவசாய மக்களுக்கு ரூ 20,000 வழங்கப்படும். மேலும் இப்பகுதியில் பூங்கா, நூலகம், சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை திட்டம் அனைத்தும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.

இப்பகுதியில் நீண்டகாலமாக பிரச்னைக்கு உள்ளாகி விபத்துக்குள்ளாகும் தேசிய நான்கு வழி சாலையில் பழனியாபுரம் திருமங்கலம் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க ஏற்பாடு செய்து தரைப்பாலம் அமைத்து தரப்படும் என தனது வாக்குறுதி குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்பகுதி பள்ளி கல்லூரி படிக்க வழியின்றி தவிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு தமது சொந்த செலவில் படிக்க உதவித் திட்டங்கள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.இந்நிலையில் இத்தகைய வாக்குறுதியுடன் 4வது வார்டு பொது மக்களிடம் வாக்கு கேட்டு சென்ற வேட்பாளர் எஸ். விஜேந்திரன் அவர்களுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் மாலை மரியாதை செய்து வரவேற்பளித்தனர்.

Tags

Next Story
ரூ.2 கோடி மோசடி..! துணை தாசில்தாரை ஏமாற்றிய சென்னை வாலிபர் கைது..!