திருமங்கலம் நகராட்சி 12வது வார்டு பாஜக வேட்பாளர் தமிழ்மணி தீவிர வாக்கு சேகரிப்பு

திருமங்கலம் நகராட்சி 12வது வார்டு பாஜக வேட்பாளர் தமிழ்மணி தீவிர வாக்கு சேகரிப்பு
X

திருமங்கலம் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் பி.தமிழ்மணி

திருமங்கலம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் 12வது வார்டு பாஜக வேட்பாளர் தமிழ்மணி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் பி.தமிழ்மணி, தந்தை பெயர் பெருமாள். இவர் கடந்த 20 ஆண்டுகளாக மதர் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிறுவனத்தின் வாயிலாக பெண்களுக்கு எதிரான பாலியல் விழிப்புணர்வு, மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் தன்னுடைய சொந்த செலவில் பொதுமக்களுக்கு உணவு மற்றும் காய்கறிகள், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு உதவிகளை திருமங்கலம் நகர் பகுதி மக்களுக்கு செய்து வருகிறார். இவர் திருமங்கலம் 12வது வார்டு உட்பட்ட அண்ண காமு தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார்.

இவருடைய செயல்பாட்டினை கண்டு பாரதிய ஜனதா கட்சியில் பாரத பிரதமர் அவர்கள் நேரடி பார்வையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர பொது செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வரும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் பெண்களுக்கான பல்வேறு முக்கிய இலவச உதவிகளை பெற்று மகளிருக்கு வழங்கி நற்பெயரை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் திருமங்கலம் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாேட்டியிடும் தமிழ்மணி 12வது வார்டு பகுதி ராஜாஜி தெரு, அன்னகாமு தோட்டம், காட்டு மாரியம்மன் கோவில் சந்து ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வீடு வீடாக சென்று வார்டுக்கு உட்பட்ட மக்களிடம் பெரியோர், சிறியோர் பாராமல் காலில் விழுந்து வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் பொதுமக்களிடையே தன்னை கவுன்சிலராக தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்து வருகிறார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றால் இப்பகுதியில் சாக்கடை கால்வாய், அடிப்படை வசதிகள், பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமரா மற்றும் முறையாக வரக்கூடிய அரசு சார்பில் வரும் அனைத்து உதவிகளையும் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!