திருமங்கலம் நகராட்சி 12 வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருமங்கலம் நகராட்சி 12 வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

திருமங்கலம் நகராட்சி 12 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் S.சித்ரா வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

திருமங்கலம் நகராட்சி 12 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் S.சித்ரா வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக தலைமை எடப்பாடி k. பழனிசாமி ஓ .பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். பி. உதயகுமார் அவர்களின் உத்தரவின்பேரில் திருமங்கலம் நகர செயலாளர் J.D விஜயன் அவரகள் திருமதி சித்ரா அவர்களுக்கு திருமங்கலம் நகராட்சி 12.வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினார் .

இவரது கணவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் இவர் கடந்த 20 ஆண்டுகளாக அதிமுக இயக்கத்திற்காக சாதாரண உறுப்பினராக இருந்து திருமங்கலம் நகர் 12வது வார்டு காட்டு மாரியம்மன் கோவில் தெரு, ராஜாஜி தெரு, அன்னகாமு தோட்டம், பெருமாள் கோவில் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக ஆட்சியின் போதும் சரி தற்பொழுது கொரோனா காலங்களிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து நற்பெயரை பெற்றவராவார்.

இவரது சமூக அக்கறையைக் கண்டு இவருக்கு வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஆர்.எஸ்.செந்தில்குமார் இவரது மனைவி S.சித்ரா அவர்களுக்கு அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டு போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் இப்பகுதியில் S.சித்ரா வீடு வீடாக சென்று பெரியவர்கள், சிறியவர்கள் பாராமல் காலில் விழுந்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சித்ரா மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் இவரது கணவர் தினமும் பணிக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த கஷ்ட காலங்களிலும் சித்ரா அவர்கள் சிறந்த சமூக சேவகராக திருமங்கலம் நகர் பகுதியில் வளம் வருகிறார். இவரது சமூக அக்கறையை கருத்தில்கொண்டு திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். பி. உதயகுமார் அவர்கள் பரிந்துரை செய்ததன் பேரில் தலைமை S.சித்திர அவர்களுக்கு நகர் மன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினைக் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்பகுதியில் S. சித்ரா அவர்கள் 12 வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்தால் இப்பகுதியில் சாக்கடை வசதிகள், அடிப்படை வசதிகள், அனைத்தும் மின்விளக்கு, குறைதீர்க்கும் மையம், சின்டெக்ஸ் குடிநீர் வசதி, வீதி தோரும் கண்காணிப்பு கேமரா போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பெற்று தருவதாகவும் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடம் தன்னை வெற்றிபெற செய்யக்கோரி S.சித்ரா இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இவருடன் சமூக ஆர்வலர்கள் ஜெயக்குமார், செல்வகுமார்,முரளி அதிமுக மகளிர் அமைப்பு அணியினர், அதிமுக முக்கிய நிர்வாகிகள், திருமங்கலம் நகர செயலாளர் ஜெ.டி. விஜயன் உட்பட அனைவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த S.சித்ரா அவர்களை வெற்றிபெற செய்யக்காேரி 12வது வார்டு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil