மழையால் தண்ணீரில் மிதக்கும் திருமங்கலம் ஹோமியோபதி அரசு கல்லூரி
கனமழையால் மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து அரசு ஹோமியோபதி மருத்துவமனை கல்லூரி குடியிருப்பு பகுதி
கனமழையால் மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து அரசு ஹோமியோபதி மருத்துவமனை கல்லூரி குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளம் புகுந்து சேதமடைந்தது..
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தற்போது பெய்து வரும் கனமழையால் திருமங்கலம் நகரில் அமைந்துள்ள அரசு ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனை பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது .இதனால் மருத்துவ மாணவர்கள் படிப்பு நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாயினர் .மேலும் கல்லூரி கட்டிடங்களும் சேதமானது இப்பகுதியில் குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டை காலி சொந்த ஊர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இப்பகுதி மறவன்குள்ம் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருமங்கலம் உசிலம்பட்டி வழியாக மூணாறு செல்லும் உசிலம்பட்டி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தண்ணீர் புகுந்ததால் போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.மேலும் திருமங்கலம நகருக்குள வெல்லம் புகுந்து விடும் என்ற பயத்தில் இப்பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.
அரசு ஹோமியோபதி கல்லூரி கட்டிடங்களையும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார் அரசு ஹோமியோபதி கல்லூரி தமிழகத்தில் திருமங்கலம் நகரில் அமைந்துள்ளது .குறிப்பிடத்தக்கது இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் விரைவில் இக்கட்டிடம் புதுப்பிக்கும் பணி ஆரம்பிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் திருமங்கலம் நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம் மழையால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.மேலும் பள்ளமான பகுதிகளில் குடியிருப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக வீட்டை காலி செய்து பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் திருமங்கலம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu