அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டத்தை கிடப்பில் போட்ட திமுக அரசு

அதிமுக ஆட்சியில்  வழங்கப்பட்ட திட்டத்தை கிடப்பில் போட்ட திமுக அரசு
X

திருமங்கலம் அருகே தே.கல்லுப்பட்டி பஸ் நிலையத்தில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஆர்.பி. உதயகுமார்.

மதுரை மாவட்டம் தே .கல்லுப்பட்டியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள்அமைச்சர் உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார்

அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் வழங்கிய திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக அரசு என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் குற்றச்சாட்டினார்.

சுட்டெரிக்கும் கத்தரி வெயில் அதிகமான நிலையில் பொதுமக்கள் நலன் கருதி அதிமுக நிர்வாகிகள் ஒன்றிணைந்து மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தே கல்லுப்பட்டி பேருந்து நிலையம் முன்பு திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் வருவாய் துறை அமைச்சருமான ஆர். பி. உதயகுமார் தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில், தர்பூசணி பழம், வெள்ளரிக்காய், ரஸ்னா, சர்பத், குடிதண்ணீர், இளநீர், வெள்ளரிக்காய் என பல்வேறு குளிர்ச்சியான பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கிப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் பொதுமக்களுக்கு எந்த மாநிலத்திலும் இல்லாத பல நல்ல திட்டங்களை அம்மாவின் ஆட்சியின் போதும் அம்மா மறைந்த பின்னும் அதனை தொடர்ந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பல எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களின் வாழ்வாதாரம் நலன் நலன் கருதி பொங்கல் பரிசு ரூபாய் 2000, கொரோனா நிவாரணம், தாலிக்கு தங்கம் மடிக்கணினி மாணவர்களுக்கு சைக்கிள், அம்மா உணவகம், இன்னும் பல எண்ணற்ற திட்டங்களை வழங்கி வந்தது.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகங்கள் பல இடங்களில் மூடப்பட்டுள்ளது.ஒரு சில இடங்களில் அம்மாவின் பெயரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.ஆனால் தற்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சி மீதான காழ்ப்புணர்ச்சியோடு தாலிக்கு தங்கம், மடிக்கணினி, பொங்கல் பரிசு ரூபாய் 2000, சைக்கிள், எதையும் தராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நிதியறிக்கை வந்தால்தான் தெரியும் எந்த திட்டத்தை மாணவர்களின் நலன் கருதியும் பொது மக்களின் நலன் கருதியும் தரப்போகிறார் என்று தெரியவில்லை?கேள்விக்குறியாக உள்ளது ?.அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் தண்ணீர் தருவதற்காக திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி தட்டுப்பாடாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சட்டசபை கூட்டத்தில் குடிதண்ணீர் வசதி முறையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளேன். இதனை கருத்தில் கொண்டு திருமங்கலம் தொகுதி சோழவந்தான் தொகுதி உசிலம்பட்டி தொகுதி ஆகிய பகுதிகளில் பல்வேறு முக்கிய பொதுமக்கள் கூடும் இடங்களில் எமது அதிமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து அவர்களது சொந்த உழைப்பில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர் என்றார் அவர்.

இதில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர். அய்யப்பன் கல்லுப்பட்டி ஒன்றியம் செயலாளர். ராமசாமி, வழக்கறிஞர் பாஸ்கர் ,டாக்டர் பாவுடையான், மீனா லட்சுமி, முனியம்மாள், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், திருமங்கலம் யூனியன் முன்னாள் சேர்மன் தமிழழகன், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் ஏ. கே .பி .சிவசுப்பிரமணி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டியன், திருமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் கூல் பாண்டி கல்லுப்பட்டி வழக்கறிஞர் திருப்பதி, மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள். மற்றும் மகளிரணி மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture