திருமங்கலம் அருகே கோயில் உண்டியலில் பணம் திருடிய இருவர் கைது

திருமங்கலம் அருகே கோயில் உண்டியலில் பணம் திருடிய  இருவர் கைது
X
திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் பூஜை பொருட்களை திருடிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட செக்கானூரணி, வடக்கம்பட்டி, சந்தனமாரியம்மன் கோவில், சிக்கம்பட்டி அரியவீரன் கோவில் உண்டியலை உடைத்து பணம் பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இச்சம்பவம் குறித்து கோவில் பூசாரிகள் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் சிக்கம்பட்டி மகேந்திரன் வயது (38) சவுந்தரபாண்டி (வயது 29 ) இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 17,000 ரூபாய் மற்றும் பூஜைப் பொருட்கள் இருசக்கர வாகனம் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!