திருமங்கலம் நகராட்சியில் ஆங்கிலத்தில் வரி ரசீது: பொதுமக்கள் எதிர்ப்பு

திருமங்கலம் நகராட்சியில் ஆங்கிலத்தில் வரி ரசீது: பொதுமக்கள் எதிர்ப்பு
X

திருமங்கலம் நகராட்சி.

திருமங்கலம் நகராட்சியில் ஆங்கிலத்தில் வரிவசூல் ரசீது வழங்கப்படுவதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு பகுதிகளில் உள்ள வீடுகள் வணிக மற்றம் நிறுவனங்களுக்கு நகராட்சி சார்பில் ஆண்டு தோறும் வீட்டு வரி குழாய் வரி பாதாள சாக்கடை இணைப்பு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த காலங்களில் ரசீது தமிழில் வழங்கப்பட்டுளளன.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வரி விதிப்பு ரசீது அனைத்தும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் வரி செலுத்த தவறினால் சொத்து பறிமுதல் செய்யப்படும் என்பது மட்டும் தமிழில் குறிப்பிட்டுள்ளது.

இதனால் திருமங்கலம் பகுதியில் உள்ள பாமர மக்கள் வரி ரசீது விபரங்கள் என்ன என்பது தெரியாமல் திணறுகின்றனர்.

இதனால் இப்பகுதி சமூக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் முன்புபோல தமிழில் வரிவசூல் ரசீதை அச்சடித்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

தமிழில் வரி ரசீது அச்சடித்து பொதுமக்களுக்கு தரவில்லை என்றால் பெரும் போராட்டம் நடைபெறும் என இப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings