தந்தை கொலையில் மகனுக்கு தொடர்பு: போலீசார் சந்தேகம்

தந்தை கொலையில்  மகனுக்கு  தொடர்பு: போலீசார் சந்தேகம்
X
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் தந்தை கொலை சம்பவத்தில் மகனை போலீசார் தேடுகின்றனர்

மதுரை மாவட்டம், செக்கானூரணியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (65). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் சுபா சென்னையில் வசிக்கிறார். ராமகிருஷ்ணன் மனநிலை பாதித்த மகன் காசி பிரபுவுடன் வசித்து வந்தார்.

காசிபிரபு அவ்வப்போது வெளியே சென்றுவிடுவாராம். ராமகிருஷ்ணனுக்கு அவரது சகோதரி தனலட்சுமி உணவு கொடுத்து பராமரித்து வந்தார். மே 23-ம் தேதி இரவு உணவு கொடுக்கச் சென்றபோது, ராமகிருஷ்ணன் தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்த செக்கானூரணி போலீஸார் உடலை மீட்டு விசாரித்தபோது அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.ராமகிருஷ்ணனுக்கும், அவரது மகனுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்த நிலையில் தந்தையை மகன் கொன்றிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரைப் பிடித்து விசாரித்தால் உண்மை தெரியவரும் என்பதால் போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story